பைக், கார் வாங்குவோருக்கு நல்ல செய்தி... ஆகஸ்ட் மாதத்தில் விலை குறைய வாய்ப்பு!

0 4524

ந்தியக் காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், நீண்ட கால இன்சூரன்ஸ் திட்டங்களின் கால அளவை ஒரு வருடமாகக் குறைத்துள்ளது.இதனால், ஆகஸ்ட் 1 - ம் தேதிக்குப் பிறகு நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை விலை கணிசமான அளவில் குறையவுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி  2018 - ம் ஆண்டு  செப்டம்பர் மாதத்தில் நீண்ட கால காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த உத்தரவானது, புது வாகனங்களைப் பதிவு செய்யும்போதே நான்கு சக்கர வாகனங்களுக்கு ஐந்து வருடமும் இரு சக்கர வாகனங்களுக்கு மூன்று வருடமும் காப்பீடு (வாகன ஓட்டி மற்றும் பாதசாரிக்கு ஏற்படும் சேதம் உட்பட)  எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தக் காப்பீட்டுக் கொள்கைகளின் செயல்திறன் எதிர்பார்த்தபடி இல்லாததால் ஜூன் மாதத்திலேயே இந்தத் திட்டத்தைக் கைவிட  காப்பீட்டு ஆணையம் முடிவெடுத்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக ஆகஸ்ட் மாதத்திலிருந்து தான் அமல்படுத்துகிறது. புதிய காப்பீட்டுக் கொள்கை மூலம் புதிய வாகனங்கள் வாங்கும்போது ஒரு ஆண்டு மட்டும் காப்பீட்டுக் கட்டணம் செலுத்தினால் போதும். இதனால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின்  விலைகள் கணிசமாகக் குறையவுள்ளது.

இது குறித்து, ஜெ.எஸ்.ஃபோர் வீல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிகுஞ் சங்கி கூறுகையில், “கொரோனா பரவல் மற்றும் பொருளாதார மந்த நிலை நிலவும் காலகட்டத்தில் காப்பீட்டுக் கால கட்டத்தைக் குறைத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. புதிய வாகனங்களை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்று யோசனையில் இருப்பவர்களின் முடிவில் இந்த காப்பீட்டுக் கால குறைப்பு நடவடிக்கை நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் நலிவடைந்துள்ள வாகன சந்தை மீண்டும் சூடுபிடிக்கும் என்று நம்பலாம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments