தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையம் விடுத்துள்ள அறிவிப்பில், வட கடலோர மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவையில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments