தமிழகத்தில் நடமாடும் ரேசன் கடைகள் திட்டம்.. வீடு தேடி வரும் அத்தியாவசியப் பொருட்கள்..!

0 18641
தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் ரேசன் கடைகளை விரைவில் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் ரேசன் கடைகளை விரைவில் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் கடைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்ப்பதோடு,  சிறிய மற்றும் மலைக்கிராம மக்களுக்கும் ரேசன் பொருட்களை கொண்டு சேர்க்கும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, வாகனங்களை வாடகைக்கு எடுத்து மூவாயிரத்து 501 நடமாடும் ரேசன் கடைகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டுறவுத்துறையின் மண்டல அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் குறிப்பிட்ட பகுதிகளில், வாரத்தில் அதிகபட்சமாக 2 நாட்களுக்கு வாகனங்கள் மூலம் வசிப்பிட பகுதிகளுக்கே வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments