தினமும் 10 லட்சம் கொரோனா பரிசோதனை செய்ய இலக்கு : பிரதமர் மோடி

0 3826
இந்தியாவில் தினமும் 10 லட்சம் கொரோனா பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் அமைக்கப்பட்ட நவீன கொரோனா பரிசோதனை ஆய்வகங்களை டெல்லியிலிருந்தபடி காணொலி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் ஒன்றுதான் இருந்த நிலையில் தற்போது 1300 ஆய்வகங்கள் இருப்பதாகவும், அங்கு நாள்தோறும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

மிகப்பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் மிகக்குறைவாகவே இருப்பதாக கூறிய பிரதமர், புதிய ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு மட்டுமல்லாது ஹெச்ஐவி, டெங்கு, ஹெபாபெட்டிஸ் பி,சி உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார். நாட்டில் தற்போது 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களும், 11 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளும் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments