காஷ்மீரில் பதுக்கப்பட்ட ரூ.50 கோடி போதைப் பொருள் பறிமுதல் : 3 தீவிரவாதிகள் கைது

0 1220
காஷ்மிரில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மிரில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

குப்வாரா மாவட்டத்திலுள்ள சாத்னா கணவாய் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் போதை மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டது.

இதில் ஏ.கே 47 ரகத் துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments