ராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்

0 814
பொய்யான முகவரி கொடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை

ராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி எண் ஆகியவை கொடுப்பதால் முடிவுகளில் தொற்று உறுதியாகும்பட்சத்தில் அவர்களை தனிமைபடுத்துவது சவாலான காரியமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ராஜஸ்தான் அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என்றும், பரிசோதனையின்போது ஆதார் விவரத்தை ஆர்டி-பிசிஆர் செயலியில் லேப் டெக்னிசியன்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் ஆய்வகங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments