அஸ்ஸாம் மற்றும் பீகாரில் வெள்ளம் காரணமாக 37 லட்சம் பேர் பாதிப்பு

0 1175
அஸ்ஸாம் மற்றும் பீகாரில் வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாம் மற்றும் பீகாரில் வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பிரம்ம புத்திரா உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பாய்வதால், 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 28 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி 96 பேரும், நிலச்சரிவு பாதிப்பால் 26 பேரும் உயிரிழந்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 400க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோக மையங்கள் 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. காசிரங்கா தேசியப் பூங்காவில் இதுவரை 125 விலங்குகள் பலியாகி உள்ளன.

பீகாரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அங்கு கந்தக் நதி மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆனால் இதுவரை உயிர் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இதேபோல் அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இன்று முதல் வரும் 29 வரை மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments