வயிற்றுப் பிழைப்புக்காக சிலம்பம் சுற்றும் 75 வயது மூதாட்டி.. காண்போரை கலங்க வைக்கும் காட்சி..!

0 16301

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக்கலையை வெளிப்படுத்தி பிச்சை எடுத்து வருவது காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அந்த மூதாட்டி, வயிற்றுப் பிழைப்புக்காக தான் கற்ற கலையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சாலையோரம் நின்று இரு கைகளிலும் சிலம்பு சுற்றி அசாத்திய திறமையை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

சிலம்பத்தை சுற்றி முடித்த பிறகு தனது இரு கைகளையும் கூப்பி தனது வயிற்றை காட்டி அவர் பிச்சை எடுப்பது காண்போரை கலங்க வைக்கிறது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த மூதாட்டிக்கு உதவ பலரும் முன்வந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments