விமானத்தில் தமிழில் வர்ணனை...! அசத்தும் சென்னை பைலட் பிரிய விக்னேஷ்

0 14381
இதோ இது தான் காவிரி,... கொள்ளிடம்..., ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்... என்று விமானத்தில் தமிழிலில் வர்ணனை வழங்கிய சென்னையைச் சேர்ந்த பைலட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளார்.

இதோ இது தான் காவிரி,... கொள்ளிடம்..., ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்... என்று விமானத்தில் தமிழிலில் வர்ணனை வழங்கிய சென்னையைச் சேர்ந்த பைலட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளார்.

சென்னை-மதுரை விமான பயணிப்பவர்களுக்கு திருச்சியின் முக்கிய இடங்களை விமானி பிரிய விக்னேஷ், தமிழில் அடையாளம் காட்டும் வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தனது உயர் அதிகாரி கேப்டன் சஞ்சீவ், விமானத்தை இயக்கும்போது முக்கிய இடங்களை அடையாளம் காட்டிக் கொண்டே வருவார் என்றும் அந்த தூண்டுதலே தமிழில் வர்ணனை தர வழிவகுத்ததாகவும் பிரிய விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார். தமிழில் நம்பிக்கையுடன் பேசும் திறமைக்கு காரணம் அரசுப்பள்ளி ஆசிரியரான தனது தாய் தவமணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments