சென்னையில் மேலும் 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1987
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தை எட்டும் நிலையில், சென்னையில் மட்டும் மேலும் ஆயிரத்து 336 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தை எட்டும் நிலையில், சென்னையில் மட்டும் மேலும் ஆயிரத்து 336 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை  91 ஆயிரத்தை நெருங்கியது. இவர்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் 375, காஞ்சிபுரத்தில் 330,  திருவள்ளூரில் 416 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. இதுதவிர, விருதுநகரில் 480, தூத்துக்குடியில் 415, மதுரையில் 274, திருநெல்வேலியில் 246, கோவையில் 238, ராணிப்பேட்டையில் 214 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

சென்னை நீங்கலாக மாவட்டங்களில் மட்டும் 5 ஆயிரத்து 136 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments