சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0 3346
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

அசுரன் படத்துக்கு பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த திரைப்படம் வாடிவாசல். வீ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படம் தொடர்பாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதும், கொரோனா தாக்கத்தால் பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சூர்யா மாடுபிடிவீரர் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments