ரூ.300 கோடி நிதி மோசடி வழக்கு- ஞானவேல் ராஜாவுக்கு சம்மன்

0 3075

300 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு, திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி நிறுவனம் தொடங்குவதாகக் கூறி, துளசி மணிகண்டன் என்பவரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் 3 பேர் மீது இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த பண மோசடியில் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறி, அவருக்கு இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கொரோனா தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மோசடியில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், 3 கோடி ரூபாய் மோசடியை காவல்துறையினர் 300 கோடி என தவறாக குறிப்பிடுவதாகவும் ஞானவேல் ராஜா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஞானவேல் ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என காவல்துறை தரப்பு வாதிடப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக தவறினால் ஞானவேல் ராஜா மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments