சீன கல்வி நிறுவனங்களுக்கும் தடை வருகிறது..?

0 2771
சீன அரசுடன் தொடர்பில் இருக்கும் அந்நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்களிப்பை குறைப்பது போன்று சீன உயர்கல்வி நிறுவனங்களையும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சீன அரசுடன் தொடர்பில் இருக்கும் அந்நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்களிப்பை குறைப்பது போன்று சீன உயர்கல்வி நிறுவனங்களையும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சீனா நிறுவனங்களின் ஊடுருவலால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கடந்த 15 ஆம் தேதி நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சீன அரசு அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிழலாக இயங்கும் சீன கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்படும் இந்திய உயர்கல்வி அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், அவற்றை தடை செய்வதற்கான வழிமுறைகளை பிரதமர் அலுவலகமே முன்மொழிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய தொலைத் தொடர்பு மற்றும் கல்வியில் சீனாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments