தமிழக அரசு துவக்கிய தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் 6000 வேலைகளுக்கான அறிவிப்பு வெளியீடு

0 10154
தமிழக அரசு துவக்கிய தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் 6000 வேலைகளுக்கான அறிவிப்பு வெளியீடு

கொரோனா எதிரொலியாக தனியார் துறையில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு 3 வாரங்களுக்கு முன்னர் துவக்கிய தனியார் துறை வேலைவாய்ப்பு இணைய தளத்தில் 6000 வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங்களும், சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களும்  இந்த தளத்தில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளன.

இதுவரை 440 நிறுவனங்கள் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளதாகவும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், விண்ணத்திருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4000 ரூபாய் முதல் 50000 ரூபாய் மாத சம்பளம் உள்ள இந்த வேலைகள் பலவும் ஓசூர், கோவை , சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ளன என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் இன்டர்வியூவை தொடர்ந்து 125 பேருக்கு பணிநியமன கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதே சமயம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக பல வேலைகளுக்கு நேரடியாக நேர்முகம் நடத்த முடியாத நிலைமை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments