சிகாகோவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு

0 798

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14பேர் காயம் அடைந்தனர். Auburn Gresham என்ற இடத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பியவர்கள் மீது காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் எதற்காக ஏன் நடைபெற்றது என்பது குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments