சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவலில் எடுக்கப்பட்டுள்ள 3 போலீசாரிடம் சிபிஐ விசாரணை தீவிரம்

0 880

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போலீசாரை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள், விரிவான விசாரணைக்காக சாத்தான்குளம் அழைத்து சென்றுள்ளனர்.

இவ்வழக்கில் 2-வது கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில்முத்து ஆகிய மூவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி வழங்கி மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, போலீசார் மூவருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விரிவான விசாரணைக்காக 3 போலீசாரையும் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் இருந்து சாத்தான்குளம் அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 காவலர்களையும் 2 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments