4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments