உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெற்றதா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 769
உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படாதது உட்பட விதிமீறல் ஏதும் நடைபெற்றதா என்பது குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படாதது உட்பட விதிமீறல் ஏதும் நடைபெற்றதா என்பது குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், உதவி காவல் ஆய்வாளருக்கான தேர்வுகள் கடந்த ஜனவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்வானவர்களில் பலர், கடலூர் ஆகாஷ் எனும் பயிற்சி மையத்தில் படித்துள்ளதாகவும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலானவர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

தேர்வறையில் பார்த்து எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டிய மனுதாரர், எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வை நடத்த உத்தரவிட கோரியிருந்தார்.

இதையடுத்து, ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறுவது எப்படி முறைகேடாகும் என மனுதாரருக்கும் தேர்வு மையங்களில் சிசிடிவி வைக்கப்படவில்லை போன்ற விதிமீறல்கள் நடைபெற்றதா என அரசுதரப்புக்கும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கு குறித்து  தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர், உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments