சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸ்: போலீசில் பிடிபட்ட 6 இளைஞர்கள்

0 777

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 இளைஞர்களை மடக்கி பிடித்த போலீசார், 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வடபழனி ஆற்காடு சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபடுவதாக கிடைத்த தகவ லின் பேரில், கிண்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஈக்காட்டுத்தாங்கல் சிக்னல் வழியாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்ற ஒரு கும்பலை, கிண்டி காவல்துறை ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீசார், சினிமாவில் வரும் காட்சி போல,  துரத்தி சென்று மடக்கினர்.

பிடிபட்ட 3 சிறுவர்கள் உள்பட 6 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, வட பழனியில் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, குதூகலத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருப்பதாக தெரிவித்தனர். வேகம் விவேகம் அல்ல என இளைஞர்களை எச்சரித்த கிண்டி போலீசார், தப்பி ஓடிய இவர்களின் நண்பர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments