முதன்முறையாக 100 மணி நேரத்தில் புதிதாக 10 லட்சம் பேருக்கு கொரோனா

உலகளவில் கடந்த 13ம் தேதி 1.3 கோடியாக இருந்த கொரோனா பாதிப்பு
உலகளவில் முதன்முறையாக 100 மணி நேரத்தில் புதிதாக 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்த கொரோனா பாதிப்பு, 3 மாதங்களுக்கு பிறகு தான் 10 லட்சத்தை கடந்தது. இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி ஒரு கோடியே 30 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 4 நாட்களில் 10 லட்சம் அதிகரித்து ஒரு கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 16 ஆம் தேதி மட்டும் அமெரிக்காவில் 77 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments