மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள் வரும் 22ந்தேதி பதவி ஏற்பு

0 1075
மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் வருகிற 22-ம் தேதி பதவியேற்றுக் கொள்கின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் 20 மாநிலங்களில் இருந்து 61 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்பொழுது அவையிலும் அல்லது கூட்டம் நடைபெறாத நாட்களில், மாநிலங்களவைத் தலைவர் அறையிலும் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்து கொள்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி விதிகளை பின்பற்றும் வகையில், மாநிலங்களவைக் கூட்டம் நடைபெறும் அரங்கிலேயே புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments