ராஜஸ்தான் அரசியலில் உச்சக்கட்ட குழப்பங்கள் - இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் கைது
ராஜஸ்தானில் ஆளும்கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்ததாக இடைத்தரகரான தொழிலதிபர் சஞ்சய் ஜெயின் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் காவல்துறையின் SOGசிறப்பு அதிரடிப் படையினர் ஜெய்ப்பூரில் சஞ்சய் ஜெயினை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சஞ்சய் ஜெயின் டெல்லியல் உள்ள சில அரசியல் தலைவர்களுடன் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியானதையடுத்து அரசைக் கவிழ்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
சஞ்சய் ஜெயின் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்றும் அரசியல் கட்சிகளின் திரைமறைவு காரியங்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments