வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரூ14 ஆயிரம் கோடி தரத் தயார் - விஜய் மல்லையா

0 2426
இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை பலமுறை தந்துள்ளார் மல்லையா

விஜய் மல்லையா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வங்கிக் கடனுக்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்துவதாக கூறுவது நம்பகமானது அல்ல என்றும் போலியான வாக்குறுதிகளை தருவது அவருக்கு பழக்கம் என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

வங்கிகளிடம் பெற்ற கடனுக்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் செட்டில்மெண்ட் தொகையாக செலுத்த தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் அவருடைய வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்துள்ளார்.

லண்டனில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அதில் விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைளில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தவிர்க்கவே இப்படியொரு மனுவை விஜய் மல்லையா தாக்கல் செய்திருப்பதாகவும், போலியான வாக்குறுதிகளை பலமுறை அவர் அளித்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments