திருப்பதி : 15 அர்ச்சகர் உள்பட 140 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

0 3208
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்கள் உட்பட 140 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் YV சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  15 அர்ச்சகர்கள்  உட்பட  140 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் YV சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கால் 80 நாட்கள் மூடப்பட்டிருந்த ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அங்குள்ள 50 அர்ச்சகர்களில், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 25 அர்ச்சகர்களின் சோதனை முடிவுகளுக்கு காத்திருக்கும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, பக்தர்களுக்கு தரிசனத்திற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தார்.

அதே நேரம்  மேலும் பல அர்ச்சகர்களுக்கு தொற்று உறுதியானால் தரிசனம் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments