மாடர்னா பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி ?

0 10182

அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னாவின் கொரோனா தடுப்பூசி 45 பேரிடம் முதல் கட்டமாக  சோதித்துப் பார்க்கப்பட்டதில், அது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்பட்ட இந்த தடுப்பூசி சோதனை முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் (New England Journal of Medicine) வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் லேசான சோர்வு, தலைவலி, உடல் வலி மற்றும் ஊசி குத்தப்பட்ட இடத்தில் வலி ஆகிய சாதாரண பின்விளைவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி ஏற்படுத்தும் என்பது தெரிய வந்துள்ள நிலையில், இந்த மாத இறுதியில் இறுதிக் கட்ட சோதனை நடத்தப்பட உள்ளது. அதன்பின்னர் மருந்து கட்டுப்பாடுடாளரின் அனுமதி பெற்று தடுப்பூசி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments