சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 20 பேர் உயிரிழப்பு

0 1276
சென்னையில் கொரோனாவுக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், சிபிஐ தலைமை காவலர் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் கொரோனாவுக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், சிபிஐ தலைமை காவலர் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிபிஐ தலைமை காவலர் ரவிக்குமார் உள்ளிட்ட 8 பேர் பலியாகியுள்ளனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், அரசு ஸ்டான்லி
மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தண்டலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி உயிரிழந்தார்.

இதேபோல் வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் ஒருவரும், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments