பெட்ரோல் விலை மாறாத நிலையில் டீசல் விலை மீண்டும் உயர்வு

0 987

பெட்ரோல் விலை உயர்த்தப்படாத நிலையில், டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணத்தால் இடையில் சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன.

பிறகு ஜூன் 7ம் தேதி முதல் அந்நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. இதனால்  ஜூன் 6ம் தேதி 75 ரூபாய் 54 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை படிப்படியாக ஜூன் 29ம் தேதி வரை 83 ரூபாய் 63 காசுகளாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பெட்ரோல் விலை மாற்றப்படாததால் அதே விலையில் நீடிக்கிறது. இருப்பினும் டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

ஜூன் 6ம் தேதி 68 ரூபாய் 22 காசுகளாக 1 லிட்டர் டீசல் விலை நேற்று வரை 78 ரூபாய் 11 காசுகளாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 11 காசுகள் உயர்த்தப்பட்டு, 78 ரூபாய் 22 காசுகளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments