முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா இல்லை - பரிசோதனை முடிவில் தகவல்

0 2377

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில், முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி
செய்யப்பட்டது.

மேலும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments