தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

0 2144

ஃபெட் எக்ஸ் (FEDeX) உட்பட உலகின் 2 முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கும் 3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஃபெட் எக்ஸ் மற்றும் யுபிஎஸ் ( UPS ) என்ற 2 லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் சவுதி அரேபியாவின் அராம்கோ ( Aramco ) , எக்சான் மொபில் கார்ப்பொரேஷன் ( ExxonMobil corporation ) சிபிசி கார்ப்பொரேஷன் ( CPC ) உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments