ஜம்மு-பதன்கோட் முன்கள பகுதியில் ராணுவ தளபதி ஆய்வு

0 1348
ஜம்மு-பதன்கோட் பகுதியில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள படைகளின் தயார் நிலை குறித்தும் ராணுவ தளபதி எம்எம்.நரவானே இன்று ஆய்வு செய்தார்.

ஜம்மு-பதன்கோட் பகுதியில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள படைகளின் தயார் நிலை குறித்தும் ராணுவ தளபதி எம்எம்.நரவானே இன்று ஆய்வு செய்தார்.

ரைசிங் ஸ்டார் கோரின் முன்களப் பகுதியான அங்கு சென்ற அவரை மேற்கு கமாண்ட் மற்றும் ரைசிங் ஸ்டார் கோர் அதிகாரிகள் வரவேற்றனர். தமது முன்கள பகுதி வருகையின் போது  அங்கு உள்ள படைப்பிரிவு கமாண்டர்களுடனும், வீரர்களுடனும் நரவானே கலந்துரையாடினார்.

குர்ஜ் படைப்பிரிவின் முன்களப் பகுதிக்கும் அவர் சென்று ஆய்வு செய்தார். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அங்கிருந்து தீவிரவாதிகள் நடத்தும் ஊடுருவலை இந்திய ராணுவம் ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என அவர் அப்போது கூறினார்.

நமது எதிரிகள் தூண்டி விட்டு நடத்தும் நிழல் யுத்தத்தை ஒடுக்குவதில் இந்தியாவின் பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டார். மேற்கு கமாண்ட் ராணுவ அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், ராணுவத்தினரின் மன உறுதியை பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments