புளோரிடாவில் ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

0 936

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏறத்தாழ 40 மாநிலங்களில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், புளோரிடா ஒரு நாடாக இருந்திருந்தால், 24 மணி நேரத்தில் அதிக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்தப்படியாக 4வது இடத்தை பிடித்திருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளோரிடாவில் உள்ள 40க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments