கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய 72 போலீசார்

0 1481

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, முழுமையாக குணமடைந்து பணிக்கு திரும்பிய 72 போலீசாரை, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வரவேற்று சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையர்கள் முதல், காவலர்கள் வரை 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் முழுமையாக குணமடைந்து இன்று பணிக்கு திரும்பினர். அவர்களை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வரவேற்று பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கினார்.

இதன்பிறகு போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கபசுரகுடிநீர் வழங்கினார். சென்னை காவல்துறையில் இதுவரை 1434 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 813 பேர் குணமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments