உக்ரைன் விமானம் சுடப்பட்டதற்கு மனிதத் தவறே காரணம் - ஈரான்

0 1054

உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரேடாரில் ஏற்பட்ட வடிவமைப்பு கோளாறே காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது முற்றிலும் மனித தவறுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் பறப்பதை கண்காணிக்கும் ரேடார் அமைப்பில் 107 டிகிரி வரை பிழை ஏற்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா, ஈரான் மோதல் உச்சகட்டத்தில் இருந்த போது, உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 176 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments