ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8பேர் தேர்வு

0 1254

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு வரும் 23-ஆம் தேதி காணொலி வழியாக நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த என்.எஸ்.விஸ்வநாதன், நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடையும் முன்பே கடந்த மார்ச் 31-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து காலியான அவரது பணியிடத்துக்கு புதிய துணை ஆளுநரை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, நிதித்துறை நியமனங்களுக்கான தேடல் குழு, 8 பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளது.

அவர்களுக்கு வரும் 23-ஆம் தேதி காணொலி வழியாக நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நபரின் பெயர் இறுதி ஒப்புதலுக்காக, பிரதமர் தலைமையில் இயங்கும் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கி சட்டப்படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். தற்சமயம், 3 துணை ஆளுநர்கள் மட்டுமே உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments