ஜியோ நிறுவனத்தில் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் ரூ.730 கோடி முதலீடு

0 1480

ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் நிறுவனமான ஜியோவில் அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனத்தின் பூஜ்ஜியம் புள்ளி 15 சதவீத பங்குகள், வையர்லெஸ் தொழில்நுட்பத்தில் முன்னனி நிறுவனமான குவால்காமிற்கு விற்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் பேஸ்புக், சில்வர் லேக் போன்ற 13 பெரு நிறுவனங்களிடம் பங்குகளை விற்று, கடனை குறைக்கும் விதத்தில் ஜியோ நிறுவனம் சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments