ஒரு கோடியே 30 லட்சத்தைக் கடந்தது உலகளவில் கொரோனா பாதிப்பு

உலக அளவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களை ஒப்பிடும்போது நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
பல்வேறு நாடுகளில் 3 ஆயிரத்து 885 பேர் கொல்லுயிரியின் தாக்கத்தினால் உயிரிழந்ததால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் 600 பேர் இறந்ததால் இறப்பு விகிதத்தில் பிரேசில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து 539 பேருடன் மெக்ஸிகோவும், 500 பேருடன் இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதேபோல் ரஷ்யா, பெரு, தென் ஆப்பிரிக்கா, ஈரான் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றிலக்கத்தில் உள்ளது.
24-hour coronavirus update:
— Reuters (@Reuters) July 13, 2020
?? Florida sets one-day record with over 15,000 new cases https://t.co/4t3dM81sx3
?? Mexico surpasses Italy to post world's fourth-highest death toll https://t.co/QlgcK7ZAOC
? WHO reports record daily increase in global cases https://t.co/YhpDxZMDY5 pic.twitter.com/YGbDOpmeL9
Comments