ராஜஸ்தானில் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக இருவர் கைது

ராஜஸ்தானில் அரசைக் கவிழ்க்க சதிசெய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பாரத் மலானி மற்றும் அசோக் சிங் ஆகியோரை ராஜஸ்தானின் சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர்.
முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தவிர மேலும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது ஊழல்தடுப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .கடந்த மாநிலங்களவைத் தேர்தலில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம்கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பத்துகோடி ரூபாய் முன்பணமாக கொடுத்து பாஜக அரசைக் கவிழ்க்க சதி செய்வதாகவும் ஆட்சி கவிழ்ந்தால் மேலும் 15 கோடி ரூபாய் என ஆசை வலை விரிவிப்பதாகவும் முதலமைச்சர் அசோக் கெலோட் குற்றம் சாட்டியுள்ளார்.
Comments