ஒரே நாளில் சென்னையில் 1,185 பேருக்கு தொற்று உறுதி

0 3081

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், முதன்முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா உயிர்ப்பலி பதிவாகி உள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேநேரம், குணம் அடைந்து, சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வீடு திரும்பி உள்ளனர். அண்டை மாவட்டங்களான திருவள்ளூரில் புதிதாக 346 பேரும், செங்கல்பட்டில் 237 பேரும், காஞ்சிபுரத்தில் 119 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

மதுரையில் 277, தூத்துக்குடியில் 175, சேலத்தில் 136, குமரியில் 133, திருச்சியில் 128, தேனியில் 119, கள்ளக்குறிச்சியில் 102, ராமநாதபுரத்தில் 81, திருநெல்வேலியில் 80 , கோவையில் 71,சிவகங்கையில் 67, தென்காசியில் 65, திருவண்ணாமலையில் 64 மற்றும் ராணிப்பேட்டையில் 50 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, சென்னையை காட்டிலும் பிற மாவட்டங்களில் இரு மடங்கு அதிகம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments