உ.பி.யில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 55 மணி நேர முழு ஊரடங்கு அமல்

0 882

உத்தர பிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 55 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில், இதுவரை 889 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்றிரவு (10ம் தேதி) 10 மணி முதல் 13ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.

இதனால் அரசு உத்தரவுப்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அத்தியாவசியம் இல்லாத கடைகள், மால்கள், ரெஸ்டாரெண்டுகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் மற்றும் பிற பொது போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாரிகார்டுகள் அமைத்துள்ளனர். மெடிக்கல், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments