ஒரே நாளில் சென்னையில் 1,205 பேருக்கு தொற்று உறுதி

0 4272

மதுரையில் புதிய உச்சம் எட்டிய கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 - ஐ தாண்டி உள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 205 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதேநேரம், குணம் அடைந்து, 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வீடு திரும்பி உள்ளனர்.

அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் புதிதாக 242 பேரும், திருவள்ளூரில் 219 பேரும், காஞ்சிபுரத்தில் 61 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. தூத்துக்குடியில் 195, மதுரையில் 192 , திருநெல்வேலியில் 145, விருதுநகரில் 143, வேலூரில் 140, சேலத்தில் 127, திருச்சியில் 109, தேனியில் 108, கன்னியா குமரியில் 105, திருவண்ணாமலையில் 103, ராமநாதபுரத்தில் 85 மற்றும் கள்ளக்குறிச்சியில் 82 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையை காட்டிலும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments