சீனாவில் வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலி

0 5543

சீனாவின் தென் பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், யாங்சி நதியில் எற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள Anhui மற்றும் Jiangxi மாகாணத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இனி வரும் நாட்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.  வெள்ளத்தால் 66,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments