எஸ்.பி.ஐ வங்கி பெயரில் போலியான ஆவணங்கள், முத்திரைகள் தயாரித்து வந்த கும்பல் கைது

0 2401

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலியாக எஸ்.பி.ஐ வங்கி நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டதுடன் ஆவணங்கள், முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான சையது கலில். இவரது மகன் கமால்பாபு என்பவர், ”பாரத ஸ்டேட் வங்கி - நார்த் பஜார்” என்ற பெயரில் போலியான சலான், வரைவோலை, காசோலை, முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வந்துள்ளார்.

தன்னை அந்த வங்கியின் மேலாளர் என்று கூறிக்கொண்டதோடு, வங்கி பெயரில் போலியான இணையதளத்தையும் உருவாக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பண்ருட்டி ஸ்டேட் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், கமால்பாபு, ஈஸ்வரி ரப்பர் ஸ்டாம்ப் உரிமையாளர் மாணிக்கம், அருணா பிரின்டர்ஸ் உரிமையாளர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments