சென்னையில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 23 பேர் கொரோனாவுக்கு பலி

0 3635

சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 23 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

தலையில் கட்டி இருந்து ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தைக்கு கடந்த 29-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, குழந்தைக்கு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை நள்ளிரவில் உயிரிழந்தது. இது தவிர, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த 63 வயது முதியவரும் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments