10 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

0 5278

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments