சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 9 தூய்மை பணியாளர்கள் பலி

0 1550

சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதித்து  இதுவரை 9 தூய்மை பணியாளர்கள் பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில், தொற்று பாதித்த தூய்மை பணியாளர்கள் குறித்து மாநகராட்சி கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது.

சென்னையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றிவரும் நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று பாதித்திருப்பதாகவும், 9 பேர் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பலர் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களாக இருப்பதால் கணக்கில் சேர்க்கவில்லை என்று  மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  தூய்மை பணியாளர்  எண், பதவி, துறை, வயது,  பாலினம், ஆய்வகத்தின் பெயர், தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் , சிகிச்சை பெற்றுவரும் மருந்துவமனை உள்ளிட்ட தகவல்களை மண்டல அலுவலர்களிடம் மாநகராட்சி கோரியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments