மணம்-சுவை இழக்கும் அறிகுறிகள் உள்ளவர்கள் 100சதவீதம் குணமடைய வாய்ப்பு

0 11074
பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று லேசாகவே உள்ளதாக ஆய்வு

கொரோனா தொற்று ஏற்பட்டு மணம் சுவை திறனை இழக்கும் நோயாளிகள் நூறு சதவிகிதம் குணமடைந்துவிடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த அறிகுறிகள் உள்ள 100 நோயாளிகளை ஆய்வு செய்ததில், எவருக்கும் மருத்துவமனை சிகிச்சையோ, ஆக்சிஜன் அல்லது வென்டிலேட்டர் உதவியோ தேவைப்படவில்லை. அதே போன்று  பெரும்பாலான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு லேசாகவே உள்ளது.

மேலும் பலருக்கு மிதமாகவும், 5 சதவிகிதத்தினருக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தொற்றின் வீரியம் அதிகமாகவும் இருப்பதும் புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றை 4 வாரங்களுக்குள் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும். நோயின் ஒவ்வொரு கட்டத்திலும் அதை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments