கொரோனா தொற்று பரவும் ஆபத்து.. புதிய அறிவியல் சான்றுகள்..!

0 38740

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து எங்கு அதிகம்? எங்கு குறைவு? கொரோனா தொற்று பரவும் ஆபத்து யாருக்கு அதிகம் உள்ளது என்பது பற்றிய புதிய அறிவியல் சான்றுகளை அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

தரைப்பரப்பின் வழியாகவும், வீட்டுக்கு வெளியே திறந்த வெளிகளிலும் தொற்று பரவும் ஆபத்து மிகக் குறைவு என அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. அலுவலகங்கள், மத வழிபாட்டிடங்கள், திரையரங்கங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நாடக அரங்கங்கள், மூடப்பட்ட அரங்குகளில் ஆட்கள் கூடும்போது தொற்று பரவும் ஆபத்து மிக அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளது. ஒருவருக்கு நோய்த் தொற்று பரவ ஆயிரம் வைரஸ் துகள் போதும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மூச்சு விடும்போது நிமிடத்துக்கு 20 வைரஸ் துகள்களும், பேசும்போது நிமிடத்துக்கு 200 வைரஸ் துகள்களும், இருமும்போதும், தும்மும்போதும் 20 கோடி வைரஸ் துகள்களும் காற்றில் பரவுகின்றன. வெளிப்படும் வைரஸ் துகளின் அளவு, அந்தச் சூழலில் ஒருவர் நிற்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்துத் தொற்று பரவல் நிகழ்கிறது. ஆறடித் தொலைவுக்குள் ஒருவர் நின்றால் 45 நிமிடங்கள் வரை நோய் தொற்றும் ஆபத்து குறைவாகும்.

முகக்கவசம் அணிந்த இருவர் நேருக்கு நேர் பேசிக் கொண்டாலும் 4 நிமிடங்கள் வரை நோய் தொற்றும் ஆபத்து குறைவாகும். நமது அருகில் யாரேனும் ஒருவர் நடந்தோ, ஓடியோ, மிதிவண்டியிலோ கடந்து சென்றால் நோய் தொற்றும் ஆபத்து குறைவு. நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் இடைவெளியுடன் நின்றால் குறிப்பிட்ட நேரம் வரை நோய் தொற்றும் ஆபத்து குறைவு. மளிகைப் பொருள் வாங்கும்போது தொற்று பரவும் ஆபத்து நடுத்தரமாக உள்ளது.

தூய்மையைக் கடைப்பிடிப்பதுடன் கடைகளில் நிற்கும் நேரத்தையும் குறைத்துக் கொண்டால் பரவும் ஆபத்தைக் குறைக்கலாம். உள்ளரங்கப் பகுதிகள், பொதுக் கழிவறைகள், பொது இடங்கள், உணவகங்கள், பணிபுரியும் இடங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் தொற்று பரவும் ஆபத்து அதிகம் உள்ளது.

விருந்துகள், திருமணங்கள், வணிகக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சி நடைபெறும் இடம், திரையரங்கங்கள் ஆகியவற்றில் நோய் பரவும் ஆபத்து மிகவும் அதிகம். உள்ளரங்கங்கள், குறுகிய இடங்கள், மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள், அதிக நேர வெளிப்பாடு ஆகியவற்றால் நோய் பரவும் ஆபத்து அதிகம். திறந்த வெளி, பெரிய காற்றோட்டமுள்ள இடங்கள், மக்கள் நெருக்கம் குறைந்த இடங்கள், குறைந்த வெளிப்பாடு ஆகியவற்றில் தொற்று பரவும் ஆபத்து குறைவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments