சைக்கிள் செயினால் பெண்களின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவந்த சீரியல் கொலைகாரனுக்கு மரண தண்டனை விதிப்பு

0 1979

மேற்கு வங்கத்தில் புருதுவான் மாவட்டத்தில் சைக்கிள் செயினால் பெண்களின் கழுத்தை இறுக்கி கொலை செய்த நபருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கார் என்ற இந்த நபர் டிப்டாப் உடையணிந்து அரசு அதிகாரி போல் நடித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைப்பான். வீட்டில் நுழைந்ததும் சைக்கிள் செயினால் பெண்களின் கழுத்தை நெருக்கிக் கொலை செய்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடிப்பான்.

பல பெண்களை இவன் பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அவன் கைது செய்யப்பட்டான். அவன் மீது கொலை பாலியல் வன்முறை என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவனுக்கு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments