ஜூலை 13-க்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள்..!

0 4798

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் நடத்தப்படும் வகுப்புகளை ஜூலை 13ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மற்றும் தனியார் என 5 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

மேலும் பாடப் புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும் என கூறினார்.

பிளஸ்-2 இறுதி தேர்வை எழுதாத 34 ஆயிரத்து 482 பேரில், மீண்டும் தேர்வெழுத விருப்பம் தெரிவித்த 718 மாணவர்களுக்கு தேர்வு நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், தேர்வு எப்போது என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என கூறினார். மேலும் தேர்வு நடைபெற்று முடிந்த 3 நாட்களில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments