திருப்பதி கோவிலில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1876

திருமலையில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மகா துவாரத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பக்தர்கள் மற்றும்  ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இக்கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர், நாதஸ்வர வித்வான்கள்,  விஜிலென்ஸ் பாதுகாப்பு ஊழியர்கள், போலீசார்  என 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளுமாறும்,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமான உணவுகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments